நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.

01 . பிபில பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிறுநீரக பிரச்சினை, இரத்தம் விஷமானமை மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 மார்ச் மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

  1. அம்பாறை, மகா ஓயா பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரண மாக 2021 மார்ச் மாதம் 06 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply