நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் மோசடி செயற்பாடுகள் தொடர் பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்குப் பொருத்தமற்ற பொருட்களைக் கண்டறிந்து அதற் கெதிராக சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப் பட்டுள்ளதாக சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply