இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அஃப்லாடாக்சின் பொருளைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மீண் டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அஃப்லாடாக்சின் பொருளைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யுடனான ஆறு கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறு துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும், எனினும் அதற்கான உரியத் திகதியைக் குறிப்பிட முடியாது எனவும் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply