நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 1,800 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமோ மாகாணத்திலுள்ள சிறைச்சாலையிலிருந்தே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து, கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்களில் ஆறு கைதிகள் திரும்பி வந்துள்ளதுடன் 35 பேர் தப்பிச் செல்ல மறுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட இனவாத பிரிவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply