நாடளாவிய ரீதியில் வைத்தியர் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கான சுமார் 4,000 வெற்றிடங்கள் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சுமார் ஆயிரம் வைத்தியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வௌியேறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

அவர்களில் ஒரு பிரிவினர், தனியார் துறையில் பணியை தொடர்வதாகவும் மற்றுமொரு பிரிவினர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக வௌிநாடுகள் நோக்கி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு வௌிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்கள், மீண்டும் நாட்டிற்கு வருகை தருவதில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன இதன்போது சுட்டிக்காட்டினார்.

Be the first to comment

Leave a Reply