கதிர்காம கந்தனின் பூமியில் கஞ்சா பயிர்ச்செய்கை! சுற்றிவளைத்த இராணுவம்

கதிர்காம கந்தனின் பூமியில் வெஹரகல காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது.

தகவலறிந்த இராணுவத்தினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத கஞ்சா சாகுபடியை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply