நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 02 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது.

01 . பஸ்சியகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இதய நோய் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

02. மொரொஸ்தொட்ட பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கே காலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இதய நோய் காரணமாக 2021 மார்ச் மாதம் 18 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply