வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித் துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய பெய்யலாம் என வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத் திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply