நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 211 பேரில் 70 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 25 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 23 , மாத் தரை மாவட்டத்தில் 12பேர் , அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12பேர் அனுராதபுர மாவட்டத்தில் 11 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 09 பேர், மாத்தளை மாவட்டத்தில் 08 பேர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 08 நேற்றைய தினம் பற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 07 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 05 பேர், களுத்துறை மாவட்டத்தில் 04 பேர் கேகாலை மாவட்டத்தில் 03 பேர், கண்டி, , இரத் தினபுரி, குருணாகல் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 14 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply