நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் இன்று உத்தி யோகப்பூர்வமாக ஆரம்பமாகின்றன. நுவரெலியா கிரகரி வாவியில் நுவரெலியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைஞர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்த ணலால் கருணாரத்ன தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ் வரன், நுவரெலியா மாவட்டச் செயலாளர், நுவரெலியா பிரதேச சபை தலைவர், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி, என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கலந்து கொண்டார்.
வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப் பந்தயம், பூப்பந்து, டேபள் டெனிஸ், குழிப்பந் தாட்டம், கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் மட்டுப்படுத்தப்பட்ட களியாட்ட விழாக்களே நடைபெறவுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக சில விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக உல்லாச பிரயாணிகள் சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி வர வேண்டும் என நுவரெலியா மாநகர சபை யின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவிக்கின்றார்.
மேலும், பொதுச் சுகாதார அதிகாரிகளினால் பிரயாணிகள் கண் காணிக்கப் படுவதோடு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார்.

Be the first to comment

Leave a Reply