யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனிதநேயமிக்க செயற்பாடு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் யாழ். நகர் மத்திய பகுதியில் உணவின்றி தவித்த சித்த சுவாதீனம் அற்ற ஒருவருக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உணவளித்துள்ளார்..

இது தொடர்பிலான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ள யாசகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாடு முழுதும் முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இவர்கள் உணவிற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு இருந்தனர்.

அவ்வாறான காலப்பகுதியில் பொலிஸாரும், பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவமும், ஊடகவியலாளர்களுமே அவர்களுக்கு உணவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply