போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலா மேற்கொள்ள முயற்சித்த நபர் ஒருவர் கைது

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, இலங்கையில் சுற்றுலா மேற் கொள்ள முயற்சித்த லெபனான் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம், இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், கட வுச்சீட்டைக் கோரியபோது, மெக்ஸிகோ நாட்டுப் பிரஜை ஒருவரின் கட வுச்சீட்டை அவர் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த கடவுச்சீட்டைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அது சர் வதேச பொலிஸாரால் தரவு தளத்தினால் இடைநிறுத்தப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேநேரம், குறித்த நபரின் பயணப் பையிலிருந்து, ஜேர்மன் நாட்டுக் கடவுச்சீட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை களில், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற் காசிய நாடுகளுக்கு அவர் சுற்றுலா மேற்கொண்டுள்ளமை தெரிய வந்தது.
இதையடுத்து, எமிரேட்ஸ் விமானம் மூலம், சந்தேக நபர் டுபாய்க்கு நாடுகடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply