பெருமளவான கொரோனா நோயாளர்கள் நேற்று கம்பஹாவில் பதிவு

கம்பஹா மாவட்டத்திலேயே நேற்று பெருமளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 92, 706 ஆக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் 264 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , இதில் 11 நோயாளர்கள் கொலன்னாவவையில் பதிவாகியுள்ளதுடன் களனி மற்றும் பியகம பிரதேசங்களில் தலா 7 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . அத்துடன் கொழும்பில் 52 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 13 நோயாளர்கள் கொழும்பு கோட்டையிலும் 6 நோயாளர்கள் பாதுக்கையிலிருந்தும் பதிவாகியுள்ளனர் .

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 38 கொரோனா நோயாளர்களும் அநுராதபுரத்தில் 11 , மாத்தளையில் 9 , குருநாகல் மற்றும் திருகோணமலையில் தலா 8 கொரோனா நோயாளர்களும் களுத்துறையில் 7 கொரோனா நோயாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 6 கொரோனா நோயாளர்களும் , தலா 5 நோயாளர்கள் என்ற ரீதியில் இரத்தினபுரி , ஹம்பாந்தோட்டை மற்றும் வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , கண்டி , காலி ,மாத்தறை மற்றும் புத்தளத்தில் தலா 4 நோயாளர்களும் கேகாலையில் 3 , அம்பாறை மற்றும் மொனராகலையில் தலா இரு நோயாளர்களும், நுவரெலியா மற்றும் பொலன்னறுவையில் தலா ஒரு நோயாளரும் பதிவாகியுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 20 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் , கிளிநொச்சி , பதுளை மற்றும் முல்லைத்தீவில் நேற்றைய தினம் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply