நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 264 பேரில் 59 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 52 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 38 , அனுரா தபுர மாவட்டத்தில் 11 பேர் , மாத்தளை மாவட்டத்தில் 09 பேர், திருகோண மலை மாவட்டத்தில் 08 பேர், குருணாகல் மாவட்டத்தில் 08 பேர், களுத் துறை மாவட்டத்தில் 07 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, வவுனியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 05பேர், கேகாலை மாவட்டத்தில் 03 பேர், காலி, மாத்தறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 02 பேர் , நுவ ரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 20 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply