நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் 03 பேர் பலி

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டி லொறியுடன் மோதிய தினால் விபத்து ஏற்பட்டதாக அஜித் ரோஹானா தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

லொறி சாரதியின் கவன குறைவால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் 51, 52 மற்றும் 20 வயதுடைய பெண்கள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

லொறியின் சாரதி சம்பவத்தின் பின்னர் தப்பியோடியுள்ளதாகவும், அதன் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply