ஜஹ்ரானின் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவர் கைது

சமூக ஊடகங்களை பயன்படுத்தி வஹாபிசத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பயங்கரவாத விசாரணை பிரிவினரல் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.வெல்லம்பிட்டியை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட இருவரும் கட்டாரில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியவர்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கட்டாரில் தொழில்புரிந்த காலத்தில் இவர்கள் வட்ஸ்அப்குழுவொன்றை உருவாக்கி தீவிரவாதம் வஹாபிசம் தொடர்பான கொள்கைகளை அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில் பரப்பினார்கள் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் விசாரணைகளின் போதுஅவர்கள் தீவிரவாதம் வஹாபிசம் தொடர்பான ஜஹ்ரான் ஹாசிமின் கொள்கைகளை பரப்பினார்கள் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கட்டார் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிற்கு எச்சரிக்கை வழங்கியுள்ளனர்.கட்டார் அதிகாரிகள் தாங்கள் விசாரணைகளைமேற்கொண்ட பின்னர்அவர்களை நாடு கடத்தியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply