6 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று இலங்கைக்கு

சீனாவிலிருந்து சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இன்றைய தினம் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர் பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழக்கப்படுகின்றது.
அதன்படி 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று காலை 11.30மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply