நேற்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 139 பேரில் 39 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 22 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20, கொழு ம்பு மாவட்டத்தில் 14 பேர், குருணாகல் மாவட்டத்தில் 07 பேர் , காலி , நுவ ரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 03 பேர் என்ற அடிப் படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 02 பேர், மாதளை, புத் தளம், முல்லைத் தீவு திருகோணமலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 14 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply