தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிடைய வைத்தது.

அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஜான் மெகுபுலியின் உடலைக் காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்ததால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.

இதில் சுவரின் இடிபாடுகளிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவலை தான்சானியா பொலிஸ் திணைக்களத் தலைவர் லசாரோ மாம் பொசாசா தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜனாதிபதியின் உடலைக் காணச் சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply