தமிழர் பகுதிகளுக்கு வருகிறார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி இதுவரைகாலமும் தென்னிலங்கையை குறிப்பாக சிங்கள மக்களை மையப்படுத்தியே நடத்தப்பட்டு வந்தது.

எனினும் இனிவரும் காலங்களில் தமிழர் பகுதிகளுக்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த தகவலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆங்கில ஏடகமொன்றுக்கு தெரிவித்தார்.

அந்த வகையில் வவுனியா, யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளை நோக்கி இனி ஜனாதிபதியின் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சி நடைபெறும் என தெரியவருகிறது.

Be the first to comment

Leave a Reply