சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!

மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பன்னிப்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

குறித்த சாரதியை நடு வீதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி நேற்று பணி இடைநிறுத்தப்பட்ருந்தார்.

மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை குறித்த பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply