கோட்டாபயவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் சிக்கல் – அரசிற்குள் உட்பூசல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இடமளிக்காத சிலர் அரசாங்கத்திற்குள் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலி ஹபுகலவில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்த மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றை நிறைவேற்ற இடமளிக்காத அணி அரசாங்கத்திற்குள்ளும் இருக்கின்றது என்பது இரகசியமானதல்ல.

இவ்வாறு தடைகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Be the first to comment

Leave a Reply