இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணெயில் புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை உறுதி

மூன்று நிறுவனங்களால் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணெயில் புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்யை மீள ஏற்றுமதி செய்வதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு இலங்கை சுங்கத்தினரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தர ஆய்வு தொடர்பான மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், மேற்கொள்ளப்பட்ட ஆய்வை மீள செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இறுதி அறிக்கையின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply