அரபிக்கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரபிக்கடல் பரப்பினை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் அந்த கடல் பிராந்தியத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே அது தொடர்பில் கடல் சார் சமூகமும், நெடுநாள் படகு கடற்றொழிலாளர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது..

குறித்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது, மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் எனவும் அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் அந்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது, மணிக்கு 55 முதல் 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply