விடுதலைப்புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது

விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
35பெண்ணொருவரும் 36 வயது ஆணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் இணையத்தளமொன்றையும் யூடியுப் சனல் ஒன்றையும் நடத்தினார்கள் என்றகுற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணை பிரிவினர் இவர்களை கைதுசெய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாவலர் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பின்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
பல மாதங்களாக செயற்பட்டு வந்த இணையத்தளமும் யூடியுப்சனலும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரைகள் அவர்களது படங்கள் மூலம் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை ஊக்குவித்தன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இணையத்தளமும் யூடியுப் சனலும் சமூகங்களிற்கு இடையில் ஒற்றுமையின்மைய உருவாக்கின என அவர்தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

.

Be the first to comment

Leave a Reply