நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் விபரம்

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 249 பேரில் 63 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 42 பேர், கம்பஹா மாவட்டத்தில் 33 பேர், பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 14 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 11 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 09 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 08 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 07 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 04 பேர், குரு ணாகல், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 03 பேர், கேகாலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட் டங்களில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங் களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply