இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை – வெளிவிவகார செயலாளர்

இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்களிற்கு ஆதரவளிக்கும் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை நான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது நான் இந்திய பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன் அவர் இந்தியா இலங்கைக்கு எந்த அநீதியும் இழைக்காது என குறிப்பிட்டிருந்தார் நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தினேன் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின்போது ஒரு பத்திரிகையாளர் நான் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்ததாக கருதிவிட்டார் அது இலங்கையில் தலைப்புச்செய்தியாக மாறிவிட்டது இந்திய ஊடகங்களும் அதனை செய்தியாக்கின எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply