நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 271 பேரில் 77 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 64 பேர், கம்பஹா மாவட்டத்தில் 27 பேர், களுத் துறை மாவட்டத்தில் 15, அம்பாறை மாவட்டத்தில் 12 பேர் மற்றும் இரத் தினபுரி மாவட்டத்தில் 10 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 09 பேர், பதுளை மாவட்டத்தில் 06 பேர், கண்டி மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருணாகல், அம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் மாத் தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 02 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் ஒருவர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 20 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply