சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கு புதிய சட்டம்

படையினருக்கு சர்வதேச விடுபாட்டுரிமையை வழங்கும் சட்டங்களின் மூலம் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வியமைச்சின் ஊடக செயலாளர் புத்திக விக்கிரமரட்ண ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு இதனைதெரிவித்துள்ளார்.

Flag of Sri Lanka on soldiers arm (collage).
நாட்டிற்கு வெளியேஉள்ள அமைப்புகள் படையினரைவிசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்காத விதத்தில்சட்டங்கள்உருவாக்கப்படும்என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சட்டங்கள் படையினரை சர்வதேசவிசாரணைகளில் இருந்து பாதுகாப்பதற்கான வலுவை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கம் அமெரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள் குறித்து கல்வியமைச்சரும் சில நாட்களிற்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.

Be the first to comment

Leave a Reply