குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – மஸ்கெலியாவில் சம்பவம்

மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தமிழ் வித்தியாலயத் தில் கல்வி கற்கும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய சுமார் 15 மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை யில் புரக்மோர் பகுதியில் வைத்து குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.

கடும் பாதிப்புக்கு உள்ளான 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தி யசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய 11 மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply