குறைந்த வருமானம் பெறுவோரை அரச போக்குவரத்து சேவையில் இணைக்க தீர்மானம்

அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறை நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடுபூராகவும் உள்ள உப டிப்போக்களை பஸ் தரிப்பிடமாக மாத்திரம் பயன்படுத்தவும் அது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் பிரதான டிப்போ மூலம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதன் ஊடாக நாடுபூராகவும் முறையானதும் சிறந்த சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச போக்குவரத்து சேவையில் சாரதி மற்றும் நடத்துனரின் வெற்றிடத்துக்காக குறைந்த வருமானம் பெறுபவர்களை தெரிவு செய்து தகுதியானவர்களை விரைவில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளது.

புதிய வாகனங்களில் காணப்படும் அதி நவீன தொழிநுட்பம் குறித்து சாரதிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஆலோசனை செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து சாரதிகளுக்கு போதிய தெளிவின்மை காரணமாக நவீன வாகனங்களின் தன்மை விரைவில் பாதிப்படைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்குமாறு நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்று உருவாக்குவதின் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதிகளுக்காக விசேட சாரதி அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவது குறித்தும் அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply