உங்களின் கணக்குப்படி நானே ஜனாதிபதி – கோட்டாபய அல்ல! ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதிலடி

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டாார்.

இதற்குப் பதில் வழங்கிய எதிர் கட்சி தலைவர் சஜித், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்குச் சூத்திரம் தயாரித்துள்ளார்.

அப்படியானால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச் சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே வெற்றி என்றார்.

Be the first to comment

Leave a Reply