மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது- நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர்

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்ததீர்மானம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் அவசியமற்றது என்பதே இலங்கையின் கருத்து என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானத்திற்கு பேரவையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் முன்னைய அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியதன் மூலம் நாட்டிற்கு துரோகமிழைத்ததுஎன தெரிவித்துள்ளார்.
உள்ளுர் பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறல் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply