இந்தியா அஸ்டிரா ஜெனேகா மருந்தினை ஏற்றுமதி செய்வதை இடைநிறுத்தியுள்ளதால் பாதிப்பு ஏற்படாது – இராஜாங்க அமைச்சர்

இந்தியா அஸ்டிரா ஜெனேகாமருந்தினை ஏற்றுமதி செய்வதைஇடைநிறுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தியவர்களிற்கு இரண்டாவது தடவை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.இந்தியாவின் சேரம் நிறுவனத்திடமிருந்து 500000டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கும் என அவர்தெரிவித்துள்ளார்.
இது தவிர முன்னர் கிடைத்த தடுப்பூசிகளும் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டாவது டோஸ் மருந்துகளை வழங்குவதில் பிரச்சினைகள் எவையும் எழாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply