வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது உலகத் தமிழருக்கு பச்சைத்துரோகம் இழைத்துள்ளது பா.ஜ.க- ஸ்டாலின் கடும் கண்டனம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு கலந்துகொள்ளாமையானது உலகத்தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நழுவியது. இல்லையென்றால் ஆதரவாகவே வாக்களித்திருக்கும், இதனை தமிழர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்திய மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நழுவியுள்ளது இந்திய அரசு. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply