வவுனியாவில் கடத்தப்பட்ட மகனைத் தேடி போராடிய தந்தை உயிரிழப்பு

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கனகையா ரஞ்சனாமூர்த்தி (வயது-63) என்பவரே மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான தற்போது 40 வயதாகும் செல்வநாதன் கடந்த 2007ஆம் ஆண்டு தந்தைக்கு உணவுகொண்டு செல்லும்போது வவுனியாவில் வைத்து கடத்தப் பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக
முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனைக் காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply