நாடாளுமன்றில் சுற்றித்திரிந்த எம்.பிக்கள்!

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது நா.உறுப்பினர்கள் சுற்றித் திரிவதை விடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வு நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியபோது, சில உறுப்பினர்கள் சபையில் சுற்றி நடப்பதும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவதுமாக இருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற அதிகாரிகளால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமர்வுகள் நடைபெறும்போது தனித்தனியே கலந்துரையாடலை நடத்த வேண்டாம் என்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமருமாறும் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.

Be the first to comment

Leave a Reply