கொரோனா தொற்றால் யாழ். நல்லூர் பெண் மரணம்

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுவாச நோய், இருமல், வயிற்றோட்டம் மற்றும் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 மார்ச் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply