அரசியலுக்காக என் ஒரே மகனை இழக்க நான் விரும்பவில்லை – சந்திரிகா

அரசியலுக்காக என் ஒரே மகனை இழக்க நான் விரும்பவில்லை என முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க தெரிவித் துள்ளார்.

எனது ஒரே மகனை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டிய அவசிய மில்லை என ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

எனது மகனை அரசியலுக்கு அழைத்து வரச் சதித்திட்டம் தீட்டுவதாக இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

நான் என் தந்தை மற்றும் கணவனை மாத்திரமின்றி என் கண்களையும் இழந்துவிட்டதால் என் மகனை இழக்கத் தயாராக இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்வந்தால், தனது மகனும் தனது பங்களிப்பைச் செய்வார் என்றும், அதற்கு எந்த ஆட்சேபனையும் நான் தெரிவிக்க மாட்டேன் என சமூக ஊடகங்களில் இடம்பெற்ற கலந் துரையாடலில் தான் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply