மக்களை நசுக்கி ஒடுக்காதீர் -அரச அதிகாரிகளுக்கு கோட்டாபய ‘அட்வைஸ்’

மக்களுக்கான சேவையின்போது அவர்களை சட்டத்தை காட்டி நசுக்கி ஒடுக்காதீர் என அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.

கங்கைகளை பாதுகாப்போம் என்ற திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர். அதனால் மக்களை நசுக்கி ஒடுக்கி சட்டத்தை பாதுகாப்பதில் பயனில்லை.

எனவே சட்டத்தை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கிராமத்தில் மக்கள் ஒருபோதும் காடுகளை அழிப்பதில்லை. அவர்கள் சுற்றாடலை பாதுகாப்பர். அந்த மக்களை வாழச்செய்ய அபிவிருத்தி அவசியம். அது நிலையான அபிவிருத்தியாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு வழிகாட்டும் வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்பதை எமது அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். நாம் யாருக்கு சேவை செய்கிறோம் என்பதை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும். நாம் சேவை செய்வது மக்களுக்காக. அதனால் மக்களை நசுக்கி ஒடுக்கி சட்டத்தை செயற்படுத்துவதில் பயனில்லை. சட்டத்தை செயற்படுத்தும் போது செயற்பாட்டு ரீதியில் சிந்திக்க வேண்டும். வேலை செய்யாமல் இருப்பது இலகு. ஆனால் வேலை செய்வது கடினம். அதற்கு அர்ப்பணிப்பு தேவை” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply