ஜனாதிபதியிடம் முன்னாள் சபாநாயகர் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கையில் வீதி விபத்துக்களினாலேயே அதிகளவானோர் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் அவற்றைத் தடுப்பதற்குரிய செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்வும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

பதுளை – பசறை 13 ஆம் மைல்கல் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனுடன் தொடர்புடைய வகையில் கரு ஜயசூரிய அவரது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கையில் பெருமளவானோர் வீதி விபத்துக்களின் காரணமாகவே உயிரிழக்கின்றார்கள். எனினும் அவற்றைத் தடுப்பதற்குரிய முறையான நடவடிக்கைகள் எவையும் தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பாதுகாப்பு செயலணியின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டு, தற்போது அவை வெறுமனே கட்டாயக் கடமையாக மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி செயற்திறனான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அப்பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply