இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி

ராஜகிரியாவில் இன்று (23) காலை நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ராஜகிரியா, ஆயுர்வேத வளைவுச்சந்தியில் கடமையில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வேகமாக வந்த வான் ஒன்று மோதியுள்ளது.

இதில் குழுவிற்கு பொறுப்பான 52 வயதான சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த இடத்தில் சோதனை செய்துகொண்டிருந்த சிறிய லொறி ஒன்றின் மீதும் வான் மோதியது. இதில் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply