யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயாளி ஒருவர் இன்று(22) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சுதுமலையைச் சேர்ந்த கொரோனா தொற்று உறுதியான 63 வயது பெண் ஒருவரே இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இத்தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

நேற்று மாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply