யாழில் சத்தமின்றி அறப்பணி செய்யும் சமூக சேவகர்

யாழில் சத்தமின்றி அறப்பணி செய்யும் சமூக சேவகர்

பிறவியிலேயே கேட்டல் குறைபாட்டுடைய (செவிப்புலன் மிகவும் குறைந்த) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு தாயின் இரு பிள்ளைகளுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனர் உயர் திரு தியாகி அவர்களின் பெரும் கருணை உள்ளத்தினால் கேட்கும் திறனை பெறவுள்ளனர்.
மீனவக் குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகளான இவர்கள் செவிப்புலனற்று இருப்பதால் பேசும் தன்மையையும் இழந்த நிலையில் எமது ஸதாகர் அவர்களை சந்தித்தனர்.
உடனடியாகக் கண் மூக்குச் சந்திரசிகிச்சை நிபுணர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் ஊடாக யாழ் போதான வைத்தியசாலையின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பரிசோதிக்கச் செய்து – விசன் கெயாரின் செவிப்புலன் நிபுணர் ஒருவரின் (சுமார் 3 மணித்தியால பரிசோதனைக்கு பிறகு) பரிந்துரைக்கு அமைவாக இரண்டு காதுகளுக்கும் பொருத்தமான செவிப்புலன் கருவிகளுக்காக ரூபாய் 133560.00 கொடுத்துதவியுள்ளார்.
ஏழு வயது பிள்ளைக்கான பரிசோதனை மாத்திரமே நேற்றுச் செய்யப்பட்டது. எதிர்வரும் நாட்களில் மற்றைய பிள்ளைக்கான பரிசோதனையும் செய்யப்படவுள்ளது இதற்கான நிதியுதவியையும் தான் கொடுக்கவுள்ளதாக எமது ஸ்தாபகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பரிசோதனையில் தனது பிள்ளையின் கேட்கும் திறனைக் கண்டவுடன் அந்தத் தாய் ஆனந்தக் கண்ணீருடன் உயர்திரு தியாகேந்திரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார். இது மட்டுமின்றி இவர் தொடர்ந்து புனரமைப்பு செய்ய முடியாத நிலையில் உள்ள கிணறுகளை புனரமைப்பு செய்தல் வறுமை கோட்டுக்கு உட்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவஉதவி வழங்கல் என்று பல்வேறு விதமான சேவைகள் இன்றும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply