உலக நீர் தினம் இன்று

சர்வதேச நீர் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் ஆறுகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாணிக்க கங்கைக்கு அருகில் கதிர்காம புனித தலத்தில் ஜனா திபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

சுற்றாடலின் முக்கிய அங்கமாகக் கருதப்படும் நீரின் தரத்தைப் பாதுகாப் பதன் மூலம் மக்களுக்கு தூய குடிநீரை வழங்குவதும் சுற்றாடல் மற்றும் உயிரியல் வளங்களைப் பாதுகாப்பதும் சுற்றுலாத் துறையை ஊக்குவிப் பதும் இதன் நோக்கமாகும்.

சுற்றாடல் அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. முழு நாட்டையும் உள் ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்திற்காக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளைப் பாதுகாக்கும் உலக தகவல் தொழில்நுட்ப இணையத் தளம் இன்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்த இணையத் தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் இந்த வேலைத் திட்டத்தின் முன்னேற்றம், ஆய்வின் தரவுகள், பிரதேசக் குழுக்களினால் வழங்கப்படும் செயற்றிட்டம் பற்றிய தகவல்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்

Be the first to comment

Leave a Reply