வவுனியாவில் பெற்ற குழந்தையைப் புதைத்த தாயார் கைது

குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த பின் அதைப் புதைத்த தாயார் ஒருவரை வவுனியா
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரின் உடலில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கிராமசேவகருக்கு அயலவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனையில் அவர் குழந்தையை பிரசவித்தமை தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பொலிஸார் அந்தப் பெண் ணைக் கைது செய்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply