அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வழக்கிலிருந்து விடுதலை

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த கையூட்டல் வழக்கிலிருந்து அவர் நிரபராதியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply