பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்

கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்குமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ரஜரட்ட பல்கலைக்கழகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழகங்களை விரைவில் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்கைளை திறப்பது தொடர்பில் சுகாதார துறையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியாங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply