தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்

ரயில் என்ஜின் சாரதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்தார்.

இதேவேளை, ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மாலை நேர அட்டவணையின் பிரகாரம் பயணிக்க வேண்டிய ரயில்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லையென நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply