இராஜகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான ஒருவர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 245 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த போதைப்பொருள், சந்தேகநபருக்கு வழங்கியது யார் என்பது தொடர்பிலும் போதைப்பொருள் எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply